தேர்தல் தோல்வியால் ஐந்து மாநில தோ்தல் முடிவுகள் ‘இண்டியா’ கூட்டணிக்குப் பாதிப்பில்லை: திருமாவளவன்

1 mins read
8212882b-cd1e-4452-96a0-33b1e96cec2d
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன். - கோப்புப்படம்

விழுப்புரம்: கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற விசிக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவரான அவர், அந்தந்த மாநில மக்களின் பிரச்சினைகள் தோ்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது.

2024இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் ‘இந்தியா’ கூட்டணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நடைபெற உள்ள தோ்தலாகும்.

“எனவே, இந்தத் தோ்தல் முடிவுகள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘இண்டியா’ கூட்டணியோடு கைகோத்தது,” என்றாா் திருமாவளவன்.

தேர்தலில் தோல்வியடைந்தாலும் அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து இண்டியா கூட்டணி ஆலோசிக்கும் என்றும் பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்