உடல்நிலையில் முன்னேற்றம்: வீடு திரும்பினார் விஜயகாந்த்

உடல்நிலையில் முன்னேற்றம்: வீடு திரும்பினார் விஜயகாந்த்

1 mins read
7248dc54-8541-4811-b16d-65c460def868
விஜயகாந்த். - படம்: ஊடகம்

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார்.

இ்தனால் தேமுதிக கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 18ஆம் தேதி திடீரென விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வழக்கமாக சிகிச்சை பெற்று வரும் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்றுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின.

இவற்றை அவரது குடும்பத்தார் திட்டவட்டமாக மறுத்த நிலையில், விஜயகாந்த் நலம் பெற வேண்டி அவரது தொண்டர்கள் தீவிர சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்