தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி

1 mins read
937c12dc-7dd3-46a5-bce6-eb5eae178749
சிறுத்தைப் புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயைக் கடித்து குதறியதைக் காட்டும் காணொளி பரவியதால் மக்கள் பதறினர். - படம்: தமிழக ஊடகம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே உள்ள புதூர் கிராமப் பகுதியில் சிறுத்தைகள் நடமாடுவதாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.

அந்த காணொளியில் சிறுத்தைப் புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயைக் கடித்து குதறியது. இதை அறிந்த கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் மற்றும் வனத்துறையினர் புதூர் கிராமத்திற்கு விரைந்து சென்று சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.

அதில் சிறுத்தைப்புலி ஒன்று ஆடுகளையும் நாயையும் தாக்கியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், சிறுத்தைகளைப் பிடிக்க தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்