தமிழ்நாட்டில் முதல்முறை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சிகிச்சைக்கு சிறப்புப் பிரிவு

1 mins read
6b18f773-d5ef-4a07-ad65-92bcaed545ce
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. - படம்: ஊடகம்

வேலூர்: தமிழ்நாட்டில் முதல்முறையாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தை களுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்புப் பிரிவு ஒன்று வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘சைல்டு பிரண்ட்லி யூனிட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள அந்தப் பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவக் குழுக்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐந்து முதல் 12 வயதிற்குட்பட்ட சிறார்கள் அதிக எண்ணிக்கையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக தேசிய குற்ற ஆவண மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பது மட்டுமன்றி அவர்கள் அந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில் மனநல சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளதாக வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“இந்த சிறப்புப் பிரிவில் குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ண கேலிச் சித்திரங்கள், ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாடுவது, கல்வி கற்பது, மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றுவது, வன விலங்குகள் உட்பட பல்வேறு வகையான வண்ண ஓவியங்கள் சிறப்புப் பிரிவின் சுவரில் வரையப்பட்டுள்ளன,” என்று மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தப் புதிய பிரிவை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டி யன் சில நாள்களுக்கு முன் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து, பிற மாவட்டங் களிலும் இத்தகைய சிறப்புப் பிரிவு தொடங்கப்பட இருப்பதாக அரசுத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்