தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினிக்கு 73வது பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல திரண்ட தீவிர ரசிகர்கள்

1 mins read
ee5bf650-b7c1-4c3f-8c30-1c76a751495f
நடிகர் ரஜினியின் 73வது பிறந்த நாளைக்கு வாழ்த்துச் சொல்வதற்காக அவரது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள். - படம்: இபிஏ

சென்னை: நடிகர் ரஜினி காந்த் டிசம்பர் 12ஆம் தேதி தனது 73வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

நடிகர் ரஜினி காந்தை நேரில் கண்டு வாழ்த்துச் சொல்ல ஏராளமான ரசிகர்கள் கைகளில் வாழ்த்துப் பதாகைகளுடன் அவரது வீட்டுக்கு அருகே திரண்டனர்.

பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்ட காவல்துறையினர் ரசிகர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதியில் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்