காவலர் தேர்வு எழுதிய பெண்களைக் கடத்திய மூவர் கைது

காவலர் தேர்வு எழுதிய பெண்களைக் கடத்திய மூவர் கைது

1 mins read
53105a63-2ce8-45c9-9ece-ae11b3c3b3ce
மனைவியின் தங்கை, தோழியைக் கடத்திய இம்மூவரும் கைது செய்யப்பட்டனர். - படம்: தமிழக ஊடகம்

கடலூர்: காவலர் தேர்வு எழுத வந்த மனைவியின் தங்கையையும் அவரது தோழியையும் காரில் கடத்திய அக்காவின் கணவர், அவரது இரு நண்பர்கள் என மூவரை காவலர்கள் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பசாந்த சிவம். இவர் தனது மனைவியின் சகோதரியையும் அவரது தோழியையும் காவலர் தேர்வு எழுதுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

அதன்பின்னர், தேர்வு எழுதிய இரு தோழிகளும் அருகில் உள்ள சில்வர் கடற்கரையில் பொழுதைக் கழித்துள்ளனர்.

சற்று நேரத்தில் காரில் வந்த பசாந்த சிவம், இருவரையும் பேருந்து நிலையத்தில் கொண்டு விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

கார் செல்லும் வழியிலேயே ஐந்து பேர் காரில் ஏறியுள்ளனர்.

அக்கா கணவருடன் திருமணம் செய்து வைப்பதற்காக அவர்களைக் கடத்தியிருப்பது தெரியவந்ததும் பெண்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பதறிப்போன பெண்கள் இருவரும், போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் ஓரிடத்தில் நின்றபோது, காரில் இருந்து சாலையில் இறங்கி கூச்சலிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் காரில் இருந்த ஆறு பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பசாந்த சிவம் உட்பட மூவரைக் கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்