ஆளுநருடன் முதல்வர் சந்தித்து பேச தயார்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

1 mins read
5a05232b-dd4d-4933-a870-691d93d16a8e
ஆளுநரை சந்தித்துப் பேச தமிழக முதல்வர் ஸ்டாலின் தயாராக இருப்பதாகவும், இதற்கான அழைப்பு ஆளுநரிடமிருந்து செவ்வாய்க்கிழமை வந்ததாகவும் தமிழக அரசு தெரிவித்தது. - படம்: ஊடகம்

சென்னை: நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக அமர்ந்து பேசி முடிவெடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரை சந்தித்துப் பேச தமிழக முதல்வர் தயார் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் - ஆளுநர் இடையே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. எனவே, முதல்வரை நேரில் அழைத்து ஆளுநர் பேசி இந்த முட்டுக்கட்டைகளை அகற்றினால் இந்த நீதிமன்றம் வெகுவாக பாராட்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. மேலும், நிறுத்தி வைத்த மசோதாக்களை அவர் சட்டசபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதை, திருத்தியோ அல்லது திருத்தம் செய்யாமலோ சபை மீண்டும் நிறைவேற்றினால், அதை ஏற்றுக் கொள்வதை தவிர ஆளுநருக்கு வேறு வாய்ப்பு இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்