இளம் மருத்துவர் மரணம்: பணிச்சுமை காரணமில்லை என அமைச்சர் விளக்கம்

இளம் மருத்துவர் மரணம்: பணிச்சுமை காரணமில்லை என அமைச்சர் விளக்கம்

படம்: ஊடகம்

14 Dec 2023 - 5:48 pm

1 mins read

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பணிச்சுமையின் காரணமாக இறந்ததாக சில ஊடகங்கள் அபாண்டமாக குற்றம் சாட்டுகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

“இறந்த மருத்துவ மாணவர் பணியில் சேர்ந்து 6 நாள்கள்தான் ஆகின்றன. அவருக்கு ஒருநாள் கூட பணி ஒதுக்கப்படவில்லை ,”என அவர் மேலும் தெரிவித்தார்.

அவராகவே ஒரு அறுவை சிகிச்சையில் பார்வையாளராகக் கலந்துகொண்டார் எனவும் இப்படி இருக்கும் நிலையில் அவர் எப்படி பணிச்சுமையின் காரணமாக இறந்திருக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மருத்துவர்மரணம்