ரயில் விபத்தை தடுத்த மானாமதுரை ரயில்வே ஊழியர் தேசிய விருதுக்குத் தேர்வு

ரயில் விபத்தை தடுத்த மானாமதுரை ரயில்வே ஊழியர் தேசிய விருதுக்குத் தேர்வு

1 mins read
71516de5-acca-4e7c-95e4-e97b56c11f6f
விருதுக்குத் தேர்வான வீரப்பெருமாள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

மதுரை: ரயில் விபத்தை தடுத்த மானாமதுரை ரயில்வே ஊழியரான வீரப்பெருமாள் தேசிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார் வீரப்பெருமாள்.

ஒருமுறை ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டிருப்பதை அவர் உரிய நேரத்தில் கண்டுபிடித்தார்.

இதையடுத்து, வேகமாகச் செயல்பட்டு அவ்வழியே சென்ற ரயிலை அவர் தடுத்து நிறுத்தினார். இதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருதுக்கு வீரப்பெருமாள் தேர்வு பெற்றார்.

இந்த ஆண்டு நூறு ஊழியர்கள், அதிகாரிகள் இந்த விருதுக்குத் தேர்வாகி உள்ளனர்.

சென்னையில் பணியாற்றும் மதுரை கோட்ட பயணச் சீட்டு பரிசோதகர் டி.செல்வகுமார், போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டில் பெயர் மாற்றம் செய்வது, முதியோர் இட ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றை கண்டறிந்து அபராதம் விதித்தார். இதற்காக அவருக்கும் தேசிய விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்