ஓராண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் சைபர் நெட் இணைய வசதி

ஓராண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் சைபர் நெட் இணைய வசதி

1 mins read
17f521eb-9562-43b8-9cbd-302b73f3cd88
பழனிவேல் தியாகராஜன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் சைபர் நெட் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்துள்ளார்.

தொழில் முனைவோர் எதிர்பார்க்கும் கருப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள் தமிழக மக்களைச் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் சைபர் இணைய வசதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் வேகமாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்