வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

1 mins read
1ce0bc2e-6f00-4372-bf02-613207055884
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டம், திராவிட மாடல் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் மாற்று சிந்தனை கொண்டோரும், திமுகவிற்கு வாக்கு அளிக்க தவறிவிட்டோமே என்று எண்ணும் வகையில் மக்கள் நலம் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருவதாக சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

மக்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரே குடையின் கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது திராவிட மாடலின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக மின்னிடும்.

மக்களுடன் முதல்வர் திட்டம் அப்படிப்பட்ட ஒரு திட்டமாக உருப்பெருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம், முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, நான் முதல்வன் உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைகின்றன என்பதை உறுதி செய்ய கள ஆய்வில் முதல்வர் என்ற அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களுக்கு தான் சென்று வருவதாக முதல்வர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்