துணைவேந்தர் வேல்ராஜ்: 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

துணைவேந்தர் வேல்ராஜ்: 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

1 mins read
204ce2d8-6185-49c0-a495-8d9469ceacf5
படம்: - ஊடகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.

ஏறக்குறைய 35 கல்லூரிகளில் மிகக் குறைவான அளவிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் சேர்க்கை குறைந்ததற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கத்தைப் பெற்றுள்ளோம். தற்போது நேரில் சென்று ஆய்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

பல தரப்பினர் மத்தியில் திரட்டப்படும் தகவல் எங்களுக்குத் திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்

தொடர்புடைய செய்திகள்