பத்து ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு நீரிழிவு நோயின் தீவிரம் அதிகரிப்பு: ராதாகிருஷ்ணன்

1 mins read
2b3a335e-77e6-498b-81ce-eec73ce7b380
ராதாகிருஷ்ணன். - படம்: ஊடகம்

சென்னை: புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் காணப்படும் விழிப்புணர்வு நீரிழிவு நோய் தொடர்பாக இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையில் நீரிழிவு நோயின் தீவிரம் அதிகரித்து உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

“மனஅழுத்தம், துரித உணவுகள், இயந்திரத்தனமான வாழ்க்கை ஆகியவையே இதற்குக் காரணம்.

“நீரிழிவு நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் முதலில் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். கடைசியாகத்தான் மருந்து உட்கொள்ள வேண்டும்.

“ஆனால் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில் பலரும் தவறு செய்கின்றனர்,” என்றார் ஆணையர் ராதாகிருஷ்ணன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்