தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் பொன்முடி விடுவிப்பு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

2 mins read
ec1c8f95-09b8-4a01-b312-c8f757df90b2
நீதிமன்ற விசாரணைக்கு வந்த அமைச்சர் பொன்முடி. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இவ்வழக்கு தொடர்பில் நாளை 21ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும் பொன்முடியும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பொன்முடியும் அவரது மனைவியும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை நீதிபதி எம். ஜெயச்சந்திரன் இத்தீர்ப்பை வழங்கினார்.

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து பிறப்பித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக அறிவித்துள்ள நீதிபதி, அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக 64.90 விழுக்காடு சொத்து குவித்தது நிரூபணம் ஆகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவினரின் தரப்பில் இதுவரை சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.

இந்தச் சூழலில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்காக ஆகஸ்ட் 10ஆம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

எனினும், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்