ஆசிரியர்-காவலாளி வீட்டில் நகை, பணம் மாயம்

1 mins read
eef33147-79ce-42d0-ad53-f859c994c72c
படம் - ஊடகம்

திருவள்ளூர்: திருவள்ளுரை அடுத்த கைவண்டூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், திங்கள்கிழமை காலை குடும்பத்தினருடன் வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

மாலை நேரத்தில் ஜெகனின் மூத்த மகன் வினோலியன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ. 5,000 ரொக்கம், 2 மடிக்கணினிகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இதேபோன்ற மற்றொரு சம்பவம் சென்னை, வடபழனியில் நடந்துள்ளது. பாபு என்பவர் காவலாளியாகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி ஆஷா உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் புறப்பட்டார். அப்போது பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஆஷா வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 உறவினர்கள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்த காவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்