அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்

1 mins read
52241ac5-5d79-4e23-ba22-f9dc8204ad4f
படம் - ஊடகம்

நாமக்கல்: அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்களது விருப்பப்படி சுடிதார் அல்லது சேலை அணிந்து பள்ளிகளுக்கு வரலாம் என்று நாமக்கல் மாவட்டத்தில் நடந்த விழாவில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவித்தார்.

சுடிதார் அணிவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்பது அரசுப் பள்ளி ஆசிரியைகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இப்போது அதற்கு அனுமதி கிடைத்திருப்பது ஆசிரியைகள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்