மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி தரக்கோரி பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து, எந்தவிதமான சாதி, மதத்தையும் புகுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்தவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.