ஜனவரி 2ல் திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு

ஜனவரி 2ல் திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு

1 mins read
b4a7529b-ab6a-4473-acc5-da475a41ac35
திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் முகப்புப்பகுதி. - படம்: ஊடகம்

திருச்சி: எதிர்வரும் ஜனவரி 2ஆம் தேதியன்று, திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள முனையத்தைப் பிரதமர் மோடி திறந்துவைக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.951 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களைத் திருச்சி மாநகக்ர காவல் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

திருச்சி விமான நிலைய ஒருங்கிணைந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் இரு அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே சமயத்தில் 4,000 அனைத்துலகப் பயணிகளையும் 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும்.

புதிய முனையத்தில் தமிழகக் கலாசார, பண்பாடு, திருவிழாக்களை மையமாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் இடம்பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்