மின்வாரியத்தின் அயராத பணி; நெல்லை, தென்காசியில் 100% மின்விநியோகம்

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தடைபட்டிருந்த மின்விநியோகம் 100 விழுக்காடு சீராகியுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன.

மேலும் ஆற்றங்கரையோரக் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மின்விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டிருந்தது.

வெள்ளம் சூழ்ந்த இதர பகுதிகளிலும் பாதுகாப்புக் கருதி மின்விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது. வெள்ளம் வடியத் தொடங்கிய பிறகு மின்விநியோகம் படிப்படியாக சீராகி வந்தது. ஆற்றங்கரையோரப் பகுதிகளில் தண்ணீர் புகுந்த வீடுகளுக்கு மக்கள் திரும்பியிருக்கும் நிலையில் அங்கெல்லாம் மின்விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்படாத பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவில்லை என்று மின்வாரியம் கூறியது.

அதேநேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக் குறிச்சி, வள்ளியூர் மின்வாரியக் கோட்டங்களில் பாதிப்பு அதிகம். அதிகனமழையால் சேதமடைந்த மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பாதைகள் ஆகியவற்றைச் சீரமைக்கும் பணிகளில் கடந்த ஆறு நாள்களாக மின்வாரிய அதிகாரிகளும் பணியாளர்களும் ஈடுபட்டு வந்தனர் என்று வாரியம் குறிப்பிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு, வெளி மாவட்டங்களிலிருந்து மின்வாரியப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரவு, பகலாக மேற்கொண்ட மின்சீரமைப்புப் பணிகளால் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மின்விநியோகம் 100 விழுக்காடு சீராகியிருக்கிறது.

திருநெல்வேலியில் தாமிரபரணிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலர் கேட்டுக்கொண்டபடி அங்கு மின்விநியோகம் அளிக்கப்படவில்லை. மழையில் நனைந்த இந்த வீடுகளில் மின்கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மின்விநியோகம் அளிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!