திருவனந்தபுரம்: தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்தப் பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலித்துள்ளது. அங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக காய்கறிகள் விலை மிகவும் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து காய்கறிகள் கேரளாவுக்குச் செல்வது குறைந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கேரளாவில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.170க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் இதன் விலை ரூ.90 ஆக இருந்தது.

