தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அண்மையில் அதிகனமழை பெய்ததால், குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கனமழை ஓய்ந்த நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குற்றாலம் பேரருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே அந்த அருவியில் குளிக்க வருவோர் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தற்போது குற்றாலம் பேரருவிக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். அதோடு வார இறுதி விடுமுறை என்பதால், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பேரருவிக்கும் அதிகமானோர் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டிசம்பர் 20ஆம் தேதி ஐந்தருவியில் சுற்றுப்பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.