கடலில் பாலூற்றி சுனாமி பேரழிவு நினைவு தினம் அனுசரிப்பு

1 mins read
1748bd45-e840-4bdc-837c-7f3d605a8cc2
சுனாமி பேரழிவின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்களில் சுனாமியால் இறந்தவா்களின் புகைப்படங்களை வைத்தும் கடலில் பாலை ஊற்றியும் மலா்களைத் தூவியும் அவா்களது உறவினா்கள் அஞ்சலி செலுத்தினர்.   - படம்: தமிழக ஊடகம்

கடலூர்: தமிழ்நாட்டில் சுனாமி பேரழிவின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) அனுசரிக்கப்பட்டது.

கடந்த 2004ல் இந்தோனீசியாவில் உள்ள சுமத்ரா தீவு அருகே கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி பேரலைகள் உருவாகி இந்தியா, இலங்கை, இந்தோனீசியா உட்பட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளில் தாங்கொணா பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மாண்டு போயினர்.

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, வேளாங்கண்ணி உட்பட தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் வசித்த மக்களில் பல்லாயிரக்கணக்கானோா் சுனாமியால் உயிரிழந்தனா்.

மறக்கமுடியாத இந்த கோர நிகழ்வை ஒட்டி தமிழகம், புதுச்சேரி கடற்கரையோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்களில் சுனாமியால் இறந்தவா்களின் புகைப்படங்களை வைத்தும் கடலில் மலா்களைத் தூவியும் பாலை ஊற்றியும் அவா்களது உறவினா்கள் அஞ்சலி செலுத்தினர். இதை ஆண்டுதோறும் ஒரு சடங்காகப் பின்பற்றி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்