வாயுக்கசிவு, கொதிகலன் வெடிப்பு குறித்து வேதனை; மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தலைவர்கள் வலியுறுத்து

சென்னை: உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு, எண்ணெய் நிறுவனத்தில் நிகழ்ந்த கொதிகலன் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தலைவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை, பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அம்மோனியா வாயுக்கசிவு வெளியேறியது.

இதனால், மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு புதன்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், வாயுக்கசிவு தொடர்பான வழக்கு ஜனவரி 2ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே, சென்னை தண்டையார்பேட்டையில் மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தில் இருந்த கொதிகலன் வெடித்து தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் உயிரிழந்தார். வெல்டிங் பணியின்போது இந்தச் சோக நிகழ்வு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

பணியின்போது பலத்த காயம் அடைந்த பன்னீர், சரவணன் ஆகிய இரு ஊழியர்களையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த பெருமாள் குடும்பத்துக்கு ஐஓசி நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில அரசு விரைந்து செயலாற்றி, பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: எண்ணூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயுக் கசிவு சம்பவம் மிகுந்த கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எண்ணூரில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டபோதே வடசென்னை தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தவேண்டும் என கூறியிருந்தேன். அதன்படி செய்திருந்தால் இந்தச் சம்பவம் ஏற்பட்டிருக்காது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: எண்ணூர் பகுதி தொழிற்சாலைகள் அனைத்திலும் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என அரசு கண்காணிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: வாயுக்கசிவு விவகாரத்தில் தவறிழைத்த நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சையும் நிவாரணமும் தமிழக அரசு அளிக்கவேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, சமக தலைவர் சரத்குமார் ஆகியோரும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!