மா.சுப்பிரமணியன்: எச்ஐவி, எயிட்சைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது

சென்னை: எச்ஐவி தொற்று, எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறந்தமுறையில் செயலாற்றி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, எழும்பூரில் தமிழக எயிட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சார்பில் ‘உலக எயிட்ஸ் தினம் 2023’ என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, “உலகளவில் 3.9 கோடி பேரும் இந்திய அளவில் 23.48 லட்சம் பேரும் தமிழகத்தில் 1.30 லட்சம் பேரும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“எச்ஐவி பாதிப்பு இந்திய அளவில் 0.24 விழுக்காடாகவும் தமிழகத்தில் 0.17 விழுக்காடாகவும் உள்ள நிலையில், எயிட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் எச்ஐவி தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் திறன்பட செயலாற்றி வருகிறது.

“2022-23ஆம் ஆண்டில் எச்ஐவி தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு முதலிடம் வழங்கியுள்ளது மத்திய அரசு.

“1994ல் தமிழக எயிட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் தொடங்கியது முதல் இப்போதுதான் இந்த முதல் விருது பெறப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

சுகாதாரத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறும்போது, “இந்திய அளவில் எயிட்சைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

“கடந்த 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 72.5 விழுக்காடு பாதிப்பை கட்டுப்படுத்தி உள்ளோம். மேலும், 89 விழுக்காடு உயிரிழப்பும் தடுக்கப்பட்டுள்ளது.

“வரும் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக எச்ஐவி, எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!