தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரு நாள்களில் 15 லட்சம் பேர் அஞ்சலி : பிரேமலதா

1 mins read
41b186d7-efe5-49ac-89b5-a72bee27d57c
பிரேமலதா. - படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய பெயர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கிடைத்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இரு தினங்களில் ஏறக்குறைய 15 லட்சத்திற்கும் மேலான மக்கள் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என தேமுதிக பொதுச்செயலாளரான அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விஜயகாந்த் செய்த தர்மமும் அவரின் நல்ல எண்ணமும் மக்களுக்கு உதவும் குணமும்தான் இதற்குக் காரணம் என்றார் அவர்.

தேமுதிக தலைமை அலுவலகம் சிறிதாக இருப்பதால் இறுதி அஞ்சலி செலுத்த அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் பிரேமலதா கூறினார்.

மறைந்த தலைவர்களுக்கு மெரினாவில் அமைக்கப்பட்டுள்ளது போன்று தேமுதிக தலைமையகத்தில் விஜயகாந்துக்கு சமாதி அமைக்கப்படும் என்றார் பிரேமலதா.

குறிப்புச் சொற்கள்