தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையோர தேநீர் கடைக்குள் புகுந்த லாரி: ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி

1 mins read
683f18c7-f10e-4920-a6cf-539dfa0709d9
லாரி மோதியதில் உருக்குலைந்து போன வேன். - படம்: ஊடகம்

புதுக்கோட்டை: சாலையோர தேநீர் கடைக்குள் திடீர் என ஒரு லாரி புகுந்த விபத்தில் 10 பேர் பலியாகி விட்டனர். இந்தச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம், நந்தன சமுத்திரம் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

அரியலூரில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருமயம் பகுதியை நோக்கி அந்த லாரி சென்று கொண்டு இருந்தது.

நந்தன சமுத்திரம் பகுதியை நெருங்கியபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த லாரி, இறுதியில் சாலையோர தேநீர் கடைக்குள் புகுந்தது.

முன்னதாக அக்கடைக்கு அருகே நின்றிருந்த வேன், கார் மீதும் மோதியது. இந்த விபத்தில் வேன், காரில் இருந்த ஐய்யப்ப பக்தர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்