81 வயது மூதாட்டி 108 சூரிய நமஸ்காரம் செய்து சாதனை

81 வயது மூதாட்டி 108 சூரிய நமஸ்காரம் செய்து சாதனை

1 mins read
089b7058-fe5e-4c71-b6e9-9c74c407c4f8
சூரிய நமஸ்காரம் செய்யும் சரஸ்வதி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திருவாரூர்: இடைவிடாமல் சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்துள்ளார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி.

அங்குள்ள நன்னிலம் பகுதி அருகே வசித்து வரும் சரஸ்வதி என்ற அவர், 45 நிமிடம் 59 விநாடிகளில் 108 வகையான சூரிய நமஸ்காரத்தை இடைவிடாமல் செய்து அசத்தியுள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சாதனை, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக யோகாசனத்தில் ஈடுபட்டு வரும் இவர், ஏற்கெனவே லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்