தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் பெயர்: முதல்வர் அறிவிப்பு!

1 mins read
a6bdf345-6448-47a2-b220-bb82e476154f
விஜயகாந்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கோயம்பேடு வளைவு சந்திப்புச் சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் எனப் பெயர் வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காலஞ்சென்ற தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் கோயம்பேடு பகுதியில் உள்ளது.

இந்த மண்டபத்துக்கு அருகே அமைந்துள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் எனப் பெயரிடப்படும் என்ற அறிவிப்பு விஜயகாந்த் ரசிகர்களுக்கும் தேமுதிகவினருக்கும் ஆறுதல் அளித்துள்ளது.

முன்னதாக தேமுதிக கட்சித் தலைமையகத்தில் விஜயகாந்துக்கு பெரிய அளவிலான சமாதி அமைக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியிருந்தார்.

மேலும், விஜயகாந்துக்கு பொது இடத்தில் மணிமண்டபம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்