மாணவர்கள் அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வீரமுத்துவேல் அறிவுறுத்து

மாணவர்கள் அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வீரமுத்துவேல் அறிவுறுத்து

1 mins read
c6cf993d-322d-47b3-be3a-bb36ab843a32
வீரமுத்துவேல். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

விழுப்புரம்: எதிர்காலம் என்பது அறிவியலை நோக்கி இருப்பதால் மாணவர்கள் அதை நோக்கி தங்களின் கல்வி அறிவை நகர்த்த வேண்டும் என்று ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆலோசனை வழங்கி உள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நடுத்தரமாக படிக்கும் மாணவனாக இருந்து படிப்பைவிட ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து தற்போது வரை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

“இஸ்ரோவில் படிப்பு அறிவிலும், அறிவியலிலும் கைதேர்ந்தோர் பலர் உள்ளனர். இதில் எனக்கு சந்திரயான் 3 திட்ட இயக்குநராகச் செயல்படும் வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

“இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி எனக்கு கொடுத்த வேலையின் மீது நேர்மையோடு செயல்பட்டதாலும் அர்ப்பணிப்பு, ஒழுக்கத்தை கடைப்பிடித்ததாலும் தான் ‘சந்திரயான் 3’ திட்டம் வெற்றி பெற்றது என்றார் வீரமுத்துவேல்.

மாணவர்கள் அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேடி வரும் வாய்ப்புகளை நல்லவிதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் நிலவின் தென் துருவத்தில் செயற்கைக் கோளை இறக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தாலும் இந்தியா அதில் வெற்றிபெற்றது. திட்டமிட்டதை எவ்வித மாற்றமின்றி சரியாக செய்ததால்தான் இந்த வெற்றி் சாத்தியமானது,” என்றார் வீரமுத்துவேல்.

குறிப்புச் சொற்கள்