தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்

1 mins read
6e67b886-0e80-47f7-9b6d-95e81a757da6
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம். - படம்: ஊடகம்

சென்னை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஜனவரி 1ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகரப் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்றார்.

“தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் கோயம்பேடு வரை இயக்கப்படாது. இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்,” என்றார் அமைச்சர் சிவசங்கர்.

இந்தப் புதிய ஏற்பாடு இனிவரும் நாள்களில் பயணிகளுக்கு மிக வசதியாக இருக்கும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்