தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழனி கோயில் தைப்பூசத் திருவிழா 19ஆம் தேதி தொடக்கம்

1 mins read
699d79c9-5dad-45aa-b89b-45307b305808
பழனி தண்டாயுதபாணி கோயில். - கோப்புப்படம்: ஊடகம்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி கோயிலில் எதிர்வரும் 19ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. 25ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவது வழக்கம்.

நடப்பாண்டிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் டிசம்பர் மாதத்தில் இருந்தே பழனியை நோக்கி நடைப்பயணம் கிளம்பிவிட்டனர்.

இத்திருவிழா 10 நாள்கள் நடைபெறும். 28ஆம் தேதி இரவு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும் என்றும் இரவு 11 மணி அளவில் கொடி இறக்குதலுடன் விழா முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்