தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு

1 mins read
cb425fd3-ce45-4fdd-a86b-50c8660595a2
பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை. - படம்: தமிழக ஊடகம்

மதுரை: தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாகக் கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

உலக புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் பாலமேட்டில் 16ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17 தேதியும் நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஜல்லிக்கட்டு