நடிகர் விஜய் மீது காலணி வீச்சு : காவல் நிலையத்தில் புகார்

1 mins read
7b815b59-e3e1-4539-8c78-9a5f7536fa6e
சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தேமுதிக நிறுவன தலைவரும் , நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். கடந்த 28ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு , நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திவிட்டு தனது வாகனத்திற்கு விஜய் சென்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி காலணி வீசப்பட்டது. இது தொடர்பான, காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி , சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்