சென்னை: காலணி தயாரிப்பில் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனம், சீனாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தைத் தொடங்க உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் சொந்த நாட்டுக்கு அப்பால் அமைக்கும் உலகளாவிய நிலையங்கள் ‘ஜிசிசி’ (குளோபல் கெபாசிடி சென்டர்) எனப்படும்.
அடிடாஸ் நிறுவனத்தின் புதிய ‘ஜிசிசி’ நிலையம் சென்னையில் அமையவிருக்கிறது.
சீனாவுக்கு வெளியே ஆசியாவில் அமையும் முதல் அடிடாஸ் நிலையம் இதுவாகும்.
நிறுவனம் இந்த நிலையம் மூலம், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணும் என்று அடிடாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

