வால்பாறை: குடியரசு தின விழாவில் பங்கேற்க, வால்பாறையைச் சேர்ந்த பழங்குடியின தம்பதியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கள்ளார்குடியைச் சேர்ந்த ஜெயபால், ராஜலட்சுமி தம்பதியர் ஆனைமலைத் தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வருகின்றனர்.
மக்களை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்கள் மூலம் பலருக்கு நில உரிமையைப் பெற்றுத் தந்துள்ளார் ராஜலட்சுமி.
மேலும், தனது கிராமத்தை முன்மாதிரி கிராமமாகவும் ஆக்கியுள்ள இவருக்கு கணவர் ஜெயபால் பலவகையிலும் உறுதுணையாக உள்ளார்.
இத்தம்பதியினரின் சமூகப் பங்களிப்பை பாராட்டும் விதமாக டெல்லியில் அதிபர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இருவரும் குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் விருது விழாவிலும் அதிபர் அளிக்கும் விருந்திலும் பங்கேற்க உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


