திருகோணமலை: இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டதாக தினமணி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
முதன்முறை என்ற போதிலும், திருகோணமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன.
இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்ட தீவிர முயற்சியால் ஜல்லிக்கட்டு இலங்கையில் காலூன்றியுள்ளது
ஜல்லிக்கட்டுடன் நிற்காமல் தமிழர்களின் அனைத்து பாரம்பரிய போட்டிகளையும் இலங்கையில் நடத்தப் போவதாகவும் அவற்றுள் சிலம்பப் போட்டி, கபடிப் போட்டி, படகுப் போட்டி ஆகியன அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.