நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் விரைவில் திறப்பு

நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் விரைவில் திறப்பு

1 mins read
b193c7ec-0309-4156-994d-70e6441cc4ae
நெம்மேலி குடிநீர் நிலையம். - படம்: ஊடகம்

சென்னை: கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நெம்மேலியில் ரூ.1,516 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடையும் என்று அவர் குறிப்பிட்டார்.

நெம்மேலியில் நாள்தோறும் 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட குடிநீர் நிலையம் அமைக்கப்படுவதாக தெரிவித்த அவர், இந்நிலையம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நேரு, இத்திட்டத்தின் மூலம் தென் சென்னையில் அமைந்துள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்பட சுமார் 9 லட்சம் பேர் பயனடைவர் என்றார்.

குறிப்புச் சொற்கள்