அண்ணா பல்கலையில் ரூ.50 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா

அண்ணா பல்கலையில் ரூ.50 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா

1 mins read
a454a445-75e2-4e44-b89d-11e657b563ce
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50 கோடி செலவில் புதிய தொழில்நுட்பப் பூங்கா கட்டப்படவுள்ளது. - படம்: இணையம்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.50 கோடி செலவில் புதிதாக தொழில்நுட்பப் பூங்கா கட்டப்பட உள்ளது. கிட்டத்தட்ட 2.80 லட்சம் சதுர அடிப் பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்காவுக்கு அண்மையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பூங்கா ஈராண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்படும். இதில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான அனுமதியும் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது. அத்துடன், சில படிப்புகளில் சேருவோருக்கு கல்விக் கட்டணத்தில் 50 விழுக்காடு வரை சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்