தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு

1 mins read
b0cc9e4c-43c1-47a0-98f4-d2b8a45f473e
சத்ய பிரத சாஹு. - படம்: ஊடகம்

சென்னை: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் சென்னையில் நடைபெற இருந்த தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினருடன் தேர்தல் ஆணையம் நேரடியாக அந்தந்த மாநிலங்களுக்கே சென்று ஆலோசனை நடத்துகிறது.

சென்னையில் திங்கட்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக இருந்தது. எனினும் அக்கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்