ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி

ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி

1 mins read
493c348b-3323-458e-a232-c6378b432948
முகேஷ் அம்பானி. - படம்: ஊடகம்

சென்னை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் சார்பில் எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் ஆகிய தொழில் துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் பங்கேற்க முடியாத நிலையில், காணொளி வசதி மூலம் அவர் உரையாற்றினார்.

அப்போது, தனது நிறுவனத்தின் புதிய ஆலை அடுத்த வாரம் தமிழகத்தில் தொடங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஜியோ நிறுவனம் கடந்த மாதமே 5ஜி இணைய சேவையை வழங்க தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார்.

நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்