ஓபிஎஸ்: தனிக்கட்சி தொடங்க மாட்டேன்

ஓபிஎஸ்: தனிக்கட்சி தொடங்க மாட்டேன்

1 mins read
eb76a684-a864-46ce-b7ac-9d18a45c0fae
ஓ.பன்னீர்செல்வம் - படம்: ஊடகம்

சென்னை: தனிக்கட்சி துவங்கும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்ட விதிகளை மதிக்காமல் காலடியில் போட்டு மிதிக்கும் சூழல் உருவாகி உள்ளதால்தான், அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

“அடிப்படை உறுப்பினராக இருப்பவர் கூட பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடலாம் என எம்.ஜி.ஆர் சட்டம் வகுத்தார். ஆனால் தற்போது சாதாரண தொண்டர்கள் போட்டியிட முடியாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளனர். எந்தக் காலத்திலும் தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை,” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

குறிப்புச் சொற்கள்