திருப்பூர்: எதிர்வரும் 19ஆம் தேதி திருப்பூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது திருப்பூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.
சில நிர்வாகக் காரணங்களால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் செந்தில்வேல் கூறினார்.

