தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம், பொங்கல் தொகுப்பு

1 mins read
bca66a17-e1cc-4fcc-af03-832ebaf6d8e4
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று, குடும்ப அட்டைதாரா்களிடம் டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை அட்டை, பொருள் இல்லா அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பும் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 9ஆம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து ஜனவரி 10 முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. டோக்கன் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் ஜன.14ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்