தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் நாய்த் தொல்லை

1 mins read
a5f8225c-3dc8-4ff0-a854-e060d4f42aa1
சென்னை விமான நிலையத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

சென்னை:  சென்னை விமான நிலையத்தின் உள்நாடு, அனைத்துலக முனையங்களின் வருகைப் பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதாலும், ஆக்ரோஷமாக இருப்பதாலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், விமான நிலைய ஊழியா்கள், பாதுகாவலா்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக விமான நிலைய நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாய்களைப் பிடித்துச் செல்லும் புளூகிராஸ் அமைப்பினர், நாய்களுக்கு இனவிருத்திக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, அப்பகுதியில் கொண்டு வந்து விடுகின்றனர். அதனால் அந்த நாய்கள் இப்பகுதியிலேயே சுற்றுகின்றன. எனவே, நாய்களை முழுமையாகத் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்