சென்னையில் தொடரும் வருமான வரித்துறை சோதனை

1 mins read
36ceba37-d494-41ef-99ad-23acb9c1872d
சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தியாகராய நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று நாள்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை, கோவை, ஈரோடு, விருதுநகர், சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகங்கள், நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தற்போது, இந்த சோதனைகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகாத நிலையில், சோதனைக்குப் பிறகு முழு விவரங்கள் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த வாரம் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று நாள்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்