வேலை நிறுத்தப் போராட்டத்தையும் மீறி 97.7% பேருந்துகள் இயக்கப்பட்டன

வேலை நிறுத்தப் போராட்டத்தையும் மீறி 97.7% பேருந்துகள் இயக்கப்பட்டன

1 mins read
bf24102b-a20d-42f9-99ca-dee91baaa468
பேருந்து நிலையம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டமானது புதன்கிழமை அன்று இரண்டாவது நாளாக நீடித்தது.

எனினும் நேற்று மதிய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 97.7 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்றாடம் இயக்கப்பட வேண்டிய 15,226 பேருந்துகளில் 14,888 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிகிறது. சென்னையில் 97.68 % மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.