சென்னை: தமிழகத்தின் துணைமுதல்வராக தான் நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த தகவல் வெறும் வதந்தி என்றும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்வரும் 21ஆம் தேதி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அப்பயணத்திற்கு முன்பு அமைச்சர் உதயநிதி துணைமுதல்வராக பொறுப்பேற்பார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்நிலையில் இத்தகவல் வெறும் வதந்தி என்று குறிப்பிட்டுள்ளார் உதயநிதி. எனினும் இந்த விவகாரத்தில் முதல்வர்தான் முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

