செந்தில் பாலாஜியின் பிணை மனு மூன்றாவது முறையாக தள்ளுபடி

1 mins read
b9e24256-4289-4a34-b903-cf8c39c16373
செந்தில் பாலாஜி. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை மனு மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தமக்குப் பிணை வழங்கக் கோரி மூன்றாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்க அமலாக்கத்துறைத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வாதங்களை செவிமடுத்த நீதிபதி செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கிவிட்டபோதும் பிணை வழங்குவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏதும் இல்லை என்பதால் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால் திமுக தரப்பு ஏமாற்றம் அடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்