அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு: துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு: துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு

1 mins read
c436e663-760b-42ff-b9aa-be42607e040f
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவருக்கு அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழை ஆர்எஸ்எஸ் - விஎச்பி தலைவர்கள் வழங்கி உள்ளனர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு, சங் பரிவார் அமைப்பினர் முக்கியப் பிரமுகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழையும், ராமருக்கு பூசை செய்த அட்சதையையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை, விஸ்வ இந்து பரிஷத்தின் அகில இந்திய இணைச்செயலாளர் பி.எம். நாகராஜன், ஆர்எஸ்எஸ் மாநில சேவைப் பிரிவு தலைவர் ராமராஜசேகர் உள்ளிட்டோர் சந்தித்து அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில் வரும் 22ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு அழைப்பிதழையும், ராமருக்கு பூசை செய்த அட்சதையையும் அளித்தனர்.

அவற்றைப் பெற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின், விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்