சென்னை: அரசுப் பள்ளிக்கு பல கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
“கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடை உள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வரும் குடியரசு தின விழாவில் அவருக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.